ராமேசுவரத்தில் பலத்த மழை
ராமேசுவரத்தில் பலத்த மழை பெய்தது.
ராமநாதபுரம்
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனிடையே ராமேசுவரம், மண்டபம் பகுதியில் நேற்று பகலில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது. மேலும் மண்டபம் வடக்கு கடல் பகுதியில் நேற்று வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாக காணப்பட்டது. குறிப்பாக வடக்கு துறைமுக பகுதி மற்றும் தோணித்துறை பகுதியிலும் கடல் சீற்றமாக இருந்தது. பாறையில் மோதி பல அடி உயரத்திற்கு கடல் அலைகள் சீறி எழுந்தன. இதை மண்டபம் கடற்கரை பூங்காவில் நின்றபடி சுற்றுலா பயணிகள் மிகுந் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்து சென்றனர். ராமேசுவரத்தில் பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
Related Tags :
Next Story