இடி, மின்னலுடன் கனமழை
இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
சிவகங்கை
திருப்புவனம்,
திருப்புவனம் பகுதியில் கடத்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல வெயில் அடித்தது. பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து திடீரென மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கி நின்றது. மேலும், இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. நேற்று பெய்த மழையால் திருப்புவனம் பகுதியில் வெயிலின் வெப்பத்தாக்கம் குறைந்து குளுமையான சூழல் நிலவியது.
Related Tags :
Next Story