நாமக்கல்லில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை
நாமக்கல்
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும் நேற்று ஆங்காங்கே சாரல்மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு கொல்லிமலையில் 6 மி.மீட்டரும், புதுச்சத்திரத்தில் 5 மி.மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.
நாமக்கல் நகரை பொறுத்தவரையில் நேற்று காலை முதலே விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்தது. குளிர்ந்த காற்று வீசியதால், குளிர்ச்சியான சீதோஷ்ணநிலை காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் சொட்டர், குல்லா அணிந்து செல்வதை பார்க்க முடிந்தது. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பின்படி நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story