நாமக்கல் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு-ஆராய்ச்சி நிலையம் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு-ஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 2:06 PM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

வானிலை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- இன்று முதல் 3 நாட்களுக்கு 3 மி.மீட்டரும், 21-ந் தேதி 2 மி.மீட்டரும்,22-ந் தேதி 1 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்றும், நாளை மறுநாளும் (திங்கட்கிழமை) மணிக்கு 4 கி.மீட்டர் வேகத்திலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வீசும். மேலும் இன்று, நாளை மற்றும் 22-ந் தேதி வடக்கு திசையில் இருந்தும், நாளை மறுநாள் மற்றும் 22-ந் தேதி தெற்கு திசையில் இருந்தும் காற்று வீசும்.

மழைக்கு வாய்ப்பு

வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 96.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும்.

காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக முறையே 90, 90, 80, 80, 70 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக முறையே 40, 40, 40, 30, 30 சதவீதமாகவும் இருக்கும். சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 5 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புஉள்ளது.

கோடைகால பராமரிப்பு

கடந்த வாரம் இறந்த கோழிகள் மேல் மூச்சுக்குழல் அயிற்சி நோயால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில்தெரிய வந்துள்ளது.

எனவே பண்ணையாளர்கள் தகுந்த உயிர் பாதுகாப்பு முறைகளையும், கோடைகால பராமரிப்பு முறைகளையும் கையாள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story