கொல்லிமலை அடிவாரத்தில் பலத்த காற்றுடன் திடீர் மழை
நாமக்கல்
சேந்தமங்கலம்:
நாமக்கல் மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. வெயிலின் உஷ்ணத்தில் இருந்து தப்பிக்க மோர், தர்பூசணி, முலாம்பழம் மற்றும் குளிர்பானங்களை பொதுமக்கள் அதிகமாக வாங்கி வருகின்றனர். பகலில் வெயிலின் தாக்கமதிகமாக இருந்தாலும், மாலை மற்றும் இரவில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை கொல்லிமலை அடிவார பகுதிகளான நடுக்கோம்பை, சின்னகாரவள்ளி, வெண்டாங்கி மற்றும் ராமநாதபுரம் புதூர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் திடீரென கனமழை பெய்தது.
இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து, ஆறுபோல ஓடியது. பாக்கு, தென்னை மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது. இந்த திடீர் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பலத்த காற்றுக்கு சில இடங்களில் பாக்கு மரங்கள் முறிந்து விழுந்தன.
Next Story