தாளவாடியில் பலத்த காற்றுடன் மழை: 500 வாழைகள் முறிந்தன


தாளவாடியில் பலத்த காற்றுடன் மழை: 500 வாழைகள் முறிந்தன
x

தாளவாடியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் 5 வாழைகள் முறிந்தன.

ஈரோடு

தாளவாடி

தாளவாடியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் 5 வாழைகள் முறிந்தன.

வாழைகள் முறிந்தன

தாளவாடி மற்றும் சுற்று பகுதியில் நேற்று காலை முதல் மதியம் வரை கடும் வெயில் அடித்தது. மதியம் 2 மணி அளவில் திடீரென மேகமூட்டம் உருவாகி மழை பெய்ய தொடங்கியது.

தாளவாடி, தொட்டகஞ்சனூர், ஓசூர், சிக்கள்ளி, இக்கலூர், கும்டாபுரம் உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் சுமார் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது.

மழை பெய்தபோது பலத்த காற்றும் வீசியது. இதனால் தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கிடு (வயது 36) என்பவரின் தோட்டத்தில் 500 நேந்திரம் வாழைகள் முறிந்தன.

போக்குவரத்து பாதிப்பு

மேலும் தொட்டகாஜனூர் செல்லும் சாலையில் உள்ள பழமையான மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக பள்ளி வாகனங்களில் வந்த மாணவ, மாணவிகள் நடந்தே வீட்டுக்கு சென்றனர்.

அதன்பின்னர் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.

தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் சாலையில் 20-க்கும் மேற்பட்ட பழமையான மரங்கள் காய்ந்து எப்போது வேண்டுமானாலும் விழும்நிலை உள்ளன. எனவே காய்ந்த நிலையில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Related Tags :
Next Story