பெரிய சேமூர் பாரதி நகர், எல்லப்பாளையம் பகுதிகளில் மழைச்சேதங்களை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார்- பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்


பெரிய சேமூர் பாரதி நகர், எல்லப்பாளையம் பகுதிகளில் மழைச்சேதங்களை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார்- பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்
x

பெரிய சேமூர் பாரதிநகர், எல்லப்பாளையம் பகுதிகளில் மழைச்சேதங்களை பார்வையிட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.

ஈரோடு

பெரிய சேமூர் பாரதிநகர், எல்லப்பாளையம் பகுதிகளில் மழைச்சேதங்களை பார்வையிட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.

மழை வெள்ளம்

ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை மழை பெய்தது. புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெரும்பள்ளம் மற்றும் பிச்சைக்காரன் பள்ளம் ஓடைகளில் இரவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பல இடங்களில் சாலைகள், தரைமட்ட பாலங்கள் பாதிக்கப்பட்டன.

எல்லப்பாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் உள்ள ஓடை வெள்ளப்பெருக்கு காரணமாக கரை உடைப்பு ஏற்பட்டது. இதனால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் ரோட்டில் பாய்ந்து, ரோடு அரித்து செல்லப்பட்டது. இதனால் பாதை துண்டிக்கப்பட்டது.

குடிசைவாசிகள் பாதிப்பு

இதுபோல் ஈரோடு பெரியசேமூர் பாரதி நகரில் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள குடிசைகளை வெள்ளம் சூழ்ந்தது.

எதிர்பாராத இந்த வெள்ளப்பெருக்கால் அங்குள்ள குடிசைவாசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வெள்ளப்பெருக்கால் 50-க்கும் மேற்பட்ட குடிசைகளை வெள்ளம் சூழ்ந்ததாக தெரிகிறது. இதில் 20-க்கும் மேற்பேட்ட வீடுகளை சேர்ந்தவர்கள் படும் பாதிப்பு அடைந்தனர்.

கலெக்டர் ஆறுதல் கூறினார்

இதுபற்றிய தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி நேற்றுக்காலை பாரதிநகர், எல்லப்பாளையம் பகுதிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். எல்லப்பாளையத்தில் சாலை அரிப்பு ஏற்பட்டு பாதை துண்டிக்கப்பட்டு இருப்பதை பார்த்த கலெக்டர், உடனடியாக போர்க்கால அடிப்படையில் சாலையை செப்பனிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதுபோல் பாரதி நகர் பகுதிக்கு சென்ற அவர் அங்குள்ள குடிசை பகுதிக்கு சென்று வெள்ளம் சூழ்ந்த குடிசைகளை பார்வையிட்டார். தண்ணீரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு உரிய உதவியை மாவட்ட நிர்வாகம் செய்யும் என்று உறுதி அளித்தார்.

அவருடன் ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.


Related Tags :
Next Story