ஈரோட்டில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


ஈரோட்டில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

ஈரோட்டில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு

பா.ஜ.க. பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் படுகொலையை கண்டித்து பா.ஜ.க. ஈரோடு தெற்கு மாவட்ட பட்டியல் அணி சார்பில் சூரம்பட்டி நால்ரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அய்யாசாமி, பா.ஜ.க. ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மொடக்குறிச்சி சி.சரஸ்வதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சங்கர் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியம், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஏ.கே.மகேஷ் உள்பட கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story