ஆசனூர் அருகே சூறைக்காற்றுடன் மழை மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஆசனூர் அருகே சூறைக்காற்றுடன் மழை மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x

ஆசனூர் அருகே சூறைக்காற்றுடன் மழை மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு

தாளவாடி

தாளவாடி ஆசனூர் அருகே நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்தது. இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அரேபாளையத்தில் இருந்து கர்நாடக மாநிலம் கொள்ளேகால் செல்லும் சாலையில் உள்ள மூங்கில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மரங்களை வெட்டி அகற்றினார்கள்.

அதன்பின்னர் அந்த வழியாக பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் வழக்கம்போல் சென்று வந்தன. அதேபோல் ஆசனூரில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் இருந்த மூங்கில் மரங்கள் அங்குள்ள மின்கம்பி மீது முறிந்து விழுந்ததால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று மூங்கில் மரங்களை அப்புறப்படுத்தி மின் இணைப்பை வழங்கினர்.

Related Tags :
Next Story