வல்லம் பகுதியில் கனமழை


வல்லம் பகுதியில் கனமழை
x

வல்லம் பகுதியில் கனமழை பெய்தது.

தஞ்சாவூர்

தஞ்சை அருகே உள்ள வல்லத்தில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். கடும் வெயில் சுட்டெரித்ததால் புழுக்கம் தாங்காமல் பொது மக்கள் பாதிப்படைந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் வல்லம், முன்னையம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இடியுடன் கனமழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story