குமரியில் மழை நீடிப்பு


குமரியில் மழை நீடிப்பு
x
தினத்தந்தி 14 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் மழை நீடித்து வரும் நிலையில் பாலமோரில் 21.2 மில்லி மீட்டர் பதிவானது.

கன்னியாகுமரி

குலசேகரம்,

குமரியில் மழை நீடித்து வரும் நிலையில் பாலமோரில் 21.2 மில்லி மீட்டர் பதிவானது.

மலைேயார பகுதியில் மழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் வானில் கார்மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது.

மலையோரம் மற்றும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், அணைகளுக்கு கணிசமான அளவு நீர் வந்து கொண்டு இருக்கிறது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிதமாக கொட்டுகிறது.

பாலமோரில் 21.2 மில்லி மீட்டர் பதிவு

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாலமோரில் 21.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பேச்சிப்பாறை அணை- 5.6, புத்தன் அணை- 4, பெருஞ்சாணி- 7.4, சிற்றார் 1- 11.4, மாம்பழத்துறையாறு- 17, தக்கலை- 1, அடையாமடை- 2.2, நாகர்கோவில்- 7, பூதப்பாண்டி- 3.2, கொட்டாரம்- 1.2, சுருளக்கோடு- 1, ஆனைக்கிடங்கு- 15.2, முக்கடல் அணை- 2.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 573 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 584 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 179 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 350 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 88 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. முக்கடல் அணைக்கு வினாடிக்கு 4.6 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறக்கப்பட்டது.


Next Story