குமரியில் மழை நீடிப்பு:பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறப்பு


குமரியில் மழை நீடிப்பு:பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 4 Sept 2023 12:15 AM IST (Updated: 4 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

பரவலாக மழை

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாத நிலையில் தற்போது கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல நேற்றும் பல இடங்களில் மழை பெய்தது.

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலையில் இருந்தே பலத்த மழையாகவும், சில நேரம் சாரல் மழையாகவும் அவ்வப்போது பெய்துகொண்டே இருந்தது.

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அடையாமடையில் 19.1 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது.

இதேபோல் மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

நாகர்கோவில்-2.4, புத்தன்அணை-4.8, சுருளோடு-5.2, தக்கலை-4.4, குளச்சல்-16.4, இரணியல்-10.2, பாலமோர்-17.4, திற்பரப்பு-5.3, கோழிப்போர்விளை-13.5, பேச்சிப்பாறை அணை-7.2, பெருஞ்சாணி அணை-4, சிற்றார் 2-2, மாம்பழத்துறையாறு-7.6, முக்கடல் 4.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

அணை நிலவரம்

மலையோர பகுதிகளிலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை சற்று குறைவான அளவே மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. அதாவது பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 1,369 கனஅடி தண்ணீர் வந்தது. அது நேற்று 656 கனஅடியாக குறைந்தது. இதே போல பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 1563 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று 547 கனஅடியாக குறைந்தது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று காலையில் 18.36 அடியாகவும், பெருஞ்சாணியின் அணை நீர்மட்டம் 36.20 அடியாகவும் உள்ளது. பெருஞ்சாணி அணையில் தண்ணீர் குறைவாக இருந்ததால் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் சுமார் 6 அடி உயர்ந்ததால் பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் பாசனத்துக்காக திறக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story