மழையால் நிரம்பிய ஏரி-குளங்கள்
மழையால் ஏரி-குளங்கள் நிரம்பின.
அரியலூர்
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியில் 'மாண்டஸ்' புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக மழை பெய்தது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் உடையார்பாளையம் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் அதிக அளவில் நீர் தேங்கியிருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக பெய்த மழையை தொடர்ந்து அவை நிரம்பின. இதில் உடையார்பாளையம், கழுமங்கலம், கச்சிப்பெருமாள், தத்தனூர், துலாரங்குறிச்சி, சூரியமணல், இடையார், வாணத்திரியான்பட்டிணம், காடுவெட்டாங்குறிச்சி, சோழங்குறிச்சி, பருக்கல், சுத்தமல்லி, மணகெதி, வெண்மான்கொண்டான், ஆதிச்சனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பியுள்ளன. உடையார்பாளையத்தில் உள்ள காண்டீப தீர்த்தம் என்ற பெரிய ஏரி நீர் நிறைந்து கடல்போல் காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story