ஆலங்குளம் பகுதிகளில் மழை
ஆலங்குளம் பகுதிகளில் மழை பெய்தது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 15 நாட்களாக வெயில் சுட்ெடரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல மிகவும் சிரமப்பட்டனர். அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறைய வில்லை. இந்தநிலையில் ஆலங்குளம், ராசாப்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, எம்.ஜி.ஆர்.நகர், இந்திராநகர், பெரியார்நகர், ஜெ.ஜெ.நகர், நேதாஜி நகர், இருளப்ப நகர், வசந்த் நகர், கலைஞர் நகர், பாரதிநகர், ஏ.டி.ஆர்.நகர், அண்ணாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 3.30 மணி முதல் 4.15 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. திடீரென பெய்த மழையினால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்தால் தான் பயிர்களை காப்பாற்ற முடியும், தண்ணீர் தட்டுப்பாடும் இருக்காது என விவசாயிகள் கூறினர்.