ஜெயங்கொண்டம் பகுதியில் மழை


ஜெயங்கொண்டம் பகுதியில் மழை
x

ஜெயங்கொண்டம் பகுதியில் மழை பெய்தது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென்று வானில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. இதைத்தொடர்ந்து சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. இதனால் பூமி குளிர்ந்தது. குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். காற்று காரணமாக கிராம பகுதிகளில் மின்சாரம் சிறிது நேரம் தடைபட்டது.


Related Tags :
Next Story