கரூர்-அரவக்குறிச்சி பகுதிகளில் மழை
கரூர்-அரவக்குறிச்சி பகுதிகளில் மழை பெய்தது.
கரூர்
கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாகவே பகல் முழுவதும் கடும் வெயில் சுட்டெரித்தது. இதனால் மக்கள் அதிக வெப்பத்தை உணர்ந்தனர். இந்த நிலையில், நேற்றிரவு பஸ் நிலைய ரவுண்டானா, தின்னப்பா தியேட்டர் கார்னர், உழவர் சந்தை ஆகிய பகுதிகளில் இரவு சுமார் 8.45 மணி முதல் 9.15 மணி வரை 30 நிமிடங்கள் பரவலாக மழை பெய்தது. இந்த திடீர் மழையால் குளிா்ந்த காற்று வீசியது. இதனால் விவசாயிகள், ெபாதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story