கீழ்வேளூர், நாகூர் பகுதிகளில் மழை


கீழ்வேளூர், நாகூர் பகுதிகளில் மழை
x

கீழ்வேளூர், நாகூர் பகுதிகளில் மழை பெய்தது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் .கீழ்வேளூர், கோவில் கடம்பனூர், ஆனைமங்கலம், கோகூர், வடகரை, ஆழியூர், குருமணாங்குடி, குருக்கத்தி, கூத்தூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இதேபோல நாகூரில் கடந்த 2 நாட்களாக மாலை நேரத்தில் சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை பலத்த இடியுடன் மழை பெய்தது. இந்த மழை 2 மணி நேரம் நீடித்தது.


Related Tags :
Next Story