குமரியில் சாரல் மழை


குமரியில் சாரல் மழை
x

குமரியில் சாரல் மழை

கன்னியாகுமரி

நாகா்கோவில்

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தின் சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது. நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

சிற்றார் 1- 4.8, பேச்சிப்பாறை 10.6, புத்தன் அணை 1.4, பெருஞ்சாணி 1.4, சிற்றார் 2- 4, மாம்பழத்துறையாறு 6.2, திற்பரப்பில் 2.8, ஆனைக்கிடங்கு 5.2, அடையாமடை 6.2 மி.மீட்டர் என மழை பதிவாகி இருந்தது.

இந்த மழையால் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 635 கனஅடி நீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 188 கனஅடி நீரும், சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 9 கனஅடி நீரும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 13 கனஅடி நீரும் வந்து கொண்டு இருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 791 கனஅடி நீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 125 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.


Next Story