குமரியில் சாரல் மழை


குமரியில் சாரல் மழை
x

குமரியில் சாரல் மழை பெய்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கோடையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. தற்போது இரவில் குளிர்காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று முன்தினம் இரவு சாரல் மழை பெய்தது. இந்த மழை அதிகபட்சமாக பாலமோரில் 13.2 மி.மீ. பதிவாகி இருந்தது. இதே போல குழித்துறை-1, பேச்சிப்பாறை-7.6, மாம்பழத்துறையாறு-2, முக்கடல்-1.4 என்ற அளவில் மழை பெய்திருந்தது. குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி தொடங்கி இருப்பதால் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 61 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 550 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 123 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 207 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.


Next Story