மூங்கில்துறைப்பட்டு பகுதியில் மழை: கடுவனூர் ஏரி நிரம்பியது


மூங்கில்துறைப்பட்டு பகுதியில் மழை: கடுவனூர் ஏரி நிரம்பியது
x
தினத்தந்தி 6 May 2023 12:15 AM IST (Updated: 6 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் பெய்த மழையால் கடுவனூர் ஏரி நிரம்பியது.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும் இரவில் இடி, மின்னலுடன் பலத்த மழையும் பெய்து வருகிறது. அந்த வகையில் மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கடுவனூர், கானாங்காடு, பாக்கம், புதூர், வடபொன்பரப்பி, வடகீரனூர், ரங்கப்பனூர், ராவத்தநல்லூர், புத்திராம்பட்டு, புதுப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரத்தில் பெய்யும் மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதன் காரணமாக நீர்நிலை பகுதிகளில் தண்ணீர் அதிக அளவில் வர தொடங்கி உள்ளது.

மேலும் கடந்த மாதம் சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஓரளவுக்கு ஏரிகளுக்கு வந்த நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் ஏரிகளுக்கு அதிகளவு தண்ணீர் வர தொடங்கி உள்ளது. இதன் காரணமாக மூங்கில்துறைப்பட்டு அடுத்த கடுவனூர் ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதேபோல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளும் நிரம்பும் தருவாயில் உள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 More update

Next Story