நாகூர், கீழ்வேளூர் பகுதிகளில் மழை


நாகூர், கீழ்வேளூர் பகுதிகளில் மழை
x

நாகூர், கீழ்வேளூர் பகுதிகளில் மழை வாகன ஓட்டிகள் அவதி

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகூரில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. இதேபோல நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு, விட்டு பெய்தது. மழையின் காரணமாக சாலைகளில், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மேலும் விநாயகர் சதுர்த்திக்காக தரைக்கடைகள் அமைத்து இருந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இதேபோல கீழ்வேளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை 10 மணி முதல் தொடங்கிய மழை பரவலாக மாலை வரை பெய்தது. கீழ்வேளூர், தேவூர், கிள்ளுக்குடி, சாட்டியக்குடி ஆந்தக்குடி, காக்கழனி, செருநல்லூர், இரட்டைமதகடி, வெண்மணி, இருக்கை, கூத்தூர், வடக்காலத்தூர், பட்டமங்கலம், ஆவராணி, புதுச்சேரி, கோவில் கடம்பனூர், ஆழியூர், சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.


Next Story