தாயில்பட்டி பகுதிகளில் மழை


தாயில்பட்டி பகுதிகளில் மழை
x

தாயில்பட்டி பகுதிகளில் மழை பெய்ததால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி, செவல்பட்டி, ஏழாயிரம்பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை சாரல் மழை பெய்தது. இந்த மழை காரணமாக பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது. மழையின் காரணமாக பட்டாசு உற்பத்தி நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள் வாகனங்களில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியும் நிறுத்தப்பட்டு அகழாய்வு குழியினை தொல்லியல் துறையினர் தார்ப்பாய் கொண்டு மூடினர்.


Related Tags :
Next Story