தா.பேட்டை, காட்டுப்புத்தூர் பகுதிகளில் மழை
தா.பேட்டை, காட்டுப்புத்தூர் பகுதிகளில் மழை பெய்தது.
திருச்சி
தா.பேட்டை:
வங்கக்கடலில் மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் திருச்சியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் விட்டு விட்டு தூறலாக மழை பெய்தது. தா.பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக தூறல் மழை விட்டு, விட்டு பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் தொட்டியம் வட்டத்தில் காட்டுப்புத்தூர், காடுவெட்டி, சீலை பிள்ளையார்புத்தூர், காரக்காடு, நத்தம், சுல்லிப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காற்றுடன் மழை பெய்தது.
Related Tags :
Next Story