திருவண்ணாமலையில் மழை
திருவண்ணாமலையில் மிதமான மழை பெய்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அவ்வப்போது லேசான வெயிலும் அடித்தது. இதையடுத்து காலை சுமார் 11 மணியளவில் இருந்து திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்ய தொடங்கியது.
இதனால் சாலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஓடியது. பள்ளங்களில் மழை நீர் தேங்கி காணப்பட்டது.
இந்த மழை சுமார் 2 மணி வரை பெய்தது. இதையடுத்து தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
நேற்று அதிகபட்சமாக செய்யாறில் 32 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
வந்தவாசி- 13, வெம்பாக்கம்- 9, சேத்துப்பட்டு- 7.2, போளூர் மற்றும் திருவண்ணாமலை- 7, ஆரணி- 5.2, ஜமுனாமரத்தூர்- 1.
Related Tags :
Next Story