திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை


திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பகலில் வெயில் அடித்தது. திடீரென பிற்பகல் 2 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனையடுத்து இடியுடன் பலத்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது.

வந்தவாசி

வந்தவாசி மற்றும் சுற்றியுள்ள வெண்குன்றம், பாதிரி, சென்னாவரம், வங்காரம், பொன்னூர், அம்மையப்பட்டு, மும்முனி, ஆராசூர், நடுகுப்பம், தெள்ளார், கீழ்கொடுங்காலூர், மழையூர் உள்ளிட்ட பகுதிகளில் காலையில் வெயில் கொளுத்தியது.

அதைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனையடுத்து பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

தொடர்ந்து வந்தவாசி பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் ஏரி, குளம், கிணறுகள் நீர் நிரம்பி வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கண்ணமங்கலம்

படவேடு, கண்ணங்கலம் பகுதிகளிலும் மழை பெய்தது. கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் குளம் போல தேங்கியது. கண்ணமங்கலம் பழைய பஸ் நிறுத்தம் பகுதியில் காட்டுக்காநல்லூர் செல்லும் சாலையில் மழைநீர் வெளியேற வழியில்லாததால் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

இதேபோல கலசபாக்கம், வெம்பாக்கம், சேத்துப்பட்டு, பெரணமல்லூர், தேசூர், தேவிகாபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.


Next Story