திருச்சியில் மழை


திருச்சியில் மழை
x

திருச்சியில் மழை பெய்தது.

திருச்சி

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆங்காங்கே சாரல் மழை மற்றும் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் அடுத்து வரும் நாட்களில் தமிழகம் முழுவதும் மற்றும் சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாநகரில் நேற்று காலை முதல் மாநகர் முழுவதும் தூறல் மழை பெய்தது. இந்த மழை பகல் 1 மணி வரை நீடித்தது. பின்னர் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது வெயில் லேசாக அடித்தது. பின்னர் மாலை 5 மணி அளவில் மீண்டும் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. அப்போது குளிர்ந்த காற்றும் வீசியது. இந்த மழையால் திருச்சி மாநகரில் குளிர்ந்த சீதோஷண நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story