வேலாயுதம்பாளையம்-குளித்தலை பகுதியில் மழை


வேலாயுதம்பாளையம்-குளித்தலை பகுதியில் மழை
x

வேலாயுதம்பாளையம்-குளித்தலை பகுதியில் மழை பெய்தது.

கரூர்

வேலாயுதம்பாளையம் பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலையில் 5 மணியில் இருந்து 6 மணி வரை பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்றன. குளித்தலை பகுதியில் கடந்த 3 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவும் பலத்த மழை பெய்த நிலையில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சாலைகளில் பொது மக்களின் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. ஆங்காங்கே சாலை மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்கி நின்றது.


Related Tags :
Next Story