வெம்பக்கோட்டையில் மழை


வெம்பக்கோட்டையில் மழை
x

மழையினால் அகழாய்வு பணிகள் பாதிக்கப்பட்டன.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, மடத்துப்பட்டி, மண்குண்டாம்பட்டி, வனமூர்த்திலிங்காபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென சாரல் மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி நிறுத்தப்பட்டு உடனடியாக வாகனங்களில் தொழிலாளர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விஜயகரிசல்குளத்தில் நடந்து வரும் அகழாய்வு குழிகள் மழையினால் சேதமடையாமல் இருக்க தார்ப்பாய் போட்டு முடி வைக்கப்பட்டன. இதனால் அகழாய்வு பணிகள் பாதிக்கப்பட்டன.


Related Tags :
Next Story