சென்னையின் ஓரிரு பகுதிகளில் பரவலாக மழை...!
சென்னையின் ஓரிரு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையின் ஒரிரு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம், அசோக் நகர், போரூர், கிண்டி உள்பட நகரின் பல பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் சற்று தணிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story