சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை...!
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்தது.
சென்னை,
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்துள்ளது. கேளம்பாக்கம், நாவலூர், புதுப்பாக்கம், மாம்பாக்கம், கோவளம், முட்டுக்காடு, திருப்போரூர், மீனம்பாக்கம் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
Related Tags :
Next Story