சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை...!


சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை...!
x

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

சென்னை,

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்றி நிலவுகிறது. மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்தது.

இந்நிலையில், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இரவு பரவலாக மழை பெய்தது. சென்னை எழும்பூர், புரசைவாக்கம், சென்டிரல், சேத்துப்பட்டு, தாம்பரம், அண்ணாநகர், ஆதம்பாக்கம், பல்லாவரம், வில்லிவாக்கம், கோயம்பேடு, குரோம்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

மழை பரவலாக பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.


Next Story