சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை...!


சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை...!
x

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை,

வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் இடிமின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்தது.

இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், கிண்டி, சென்னை சென்டிரல், கொளத்தூர், கோயம்பேடு, சேத்துப்பட்டு, பள்ளிக்கரணை உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

மாநகர், புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருவதால் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோரும், வாகன ஓட்டிகளும் சற்று அவதிக்குள்ளாகியுள்ளனர்.


Next Story