தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி


தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
x

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

சென்னை,

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. திருநெல்வேலி, மதுரை, தேனி, கும்பகோணம், கடலூர், நாகை உள்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்தது.

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டிய நிலையில் இன்று பெய்த மழை வெப்பத்தை தணித்து குளிர்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story