மழை நீர் வடிகாலில் தூர்வாரும் பணி


மழை நீர் வடிகாலில் தூர்வாரும் பணி
x
திருப்பூர்

மழை நீர் வடிகாலில் தூர்வாரும் பணி

வெள்ளகோவில் பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. மழையின் காரணமாக சாலையோரங்களில் கிடந்த குப்பைகள் மழை நீர் வடிகாலுக்குள் விழுந்து அடைப்பு ஏற்பட்டது. இதனால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நின்றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டும், பொதுமக்கள் நடந்து செல்லவும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தூர்வாறும் பணி நடந்தது.இந்த பணியை நகராட்சி ஆணையர் வெங்கடேஸ்வரன், பொறியாளர் திலீபன், துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

1 More update

Next Story