வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது


வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது
x
திருப்பூர்

பல்லடம், ஆக.30-

பல்லடத்தில் கடந்த 4 நாட்களாக, தொடர்ந்து மாலை வேளைகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரு மணிநேரம் மழை பெய்தது. இதனால் பல்லடம் கிராம பகுதிகளான சுக்கம்பாளையம், கரடிவாவிபுதூர் ஆகிய இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். சுக்கம்பாளையம் காலனி பகுதியில் மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது "மழைநீர் செல்வதற்கு சரியான வடிகால் வசதி இல்லாததால், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து தேங்கி நிற்கிறது. எனவே குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.


Next Story