தரைப்பாலத்தில் தேங்கும் மழைநீரால் மாணவர்கள் அவதி


தரைப்பாலத்தில் தேங்கும் மழைநீரால் மாணவர்கள் அவதி
x

பாலக்கோடு அருகே தரைப்பாலத்தில் தேங்கும் மழைநீரால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த பகுதியில் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே தரைப்பாலத்தில் தேங்கும் மழைநீரால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த பகுதியில் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேங்கும் மழைநீர்

பாலக்கோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றது. இந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக சேலம்-ஓசூர் 4 வழிச்சாலையில் பாலக்கோடு அருகே ரெட்டியூர் தரைப்பாலத்திற்கு அடியில் சுமார் 2 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி நிற்கிறது.

இதனால் அந்த வழியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மழைநீரில் நடந்து சென்று வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்களில் மழைநீரில் ஊர்ந்து செல்கின்றன. அப்போது நடந்து செல்பவர்கள் மற்றும் மாணவர்கள் மீது மழைநீர் விழுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வடிகால் வசதி

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் மழைக்காலங்களில் இந்த தரைப்பாலத்திற்கு அடியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில் பள்ளி மாணவர்கள் நடந்து சென்று வருகின்றனர். அவர்களுக்கு கால்களில் சேற்றுபுண் ஏற்படுகிறது. மேலும் வாகனங்கள் செல்லும்போது மாணவர்கள் மீது தண்ணீர் விழுகிறது. இதனால் அவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இதனால் தரைப்பாலத்திற்கு அடியில் தேங்கும் மழைநீரை முழுமையாக அகற்றவும், நிரந்தரமாக வடிகால் வசதி செய்தும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story