குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்


குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
x
திருப்பூர்


அன்னூர், கருவலூர், அவினாசி, திருமுருகன் பூண்டி, அனுப்பர்பாளையம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவினாசி மேட்டுப்பாளையம் ரோட்டில் தாசம்பாளையம் பிரிவு அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடி வீணாகிறது. வடிகால் வாரியத்தனர் உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story