சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்
பள்ளிபாளையத்தில் சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது.
நாமக்கல்
பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் சங்ககிரி சாலை பகுதியில் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி சாலையில் சென்றது. மேலும் விவசாய நிலங்களிலிருந்து வந்த மழைநீர் சாக்கடை கால்வாயில் கலந்து பள்ளிபாளையம் பஸ் நிலையம் சாலையில் ஆறாக ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு சென்றனர். இதையடுத்து நகராட்சி மேற்பார்வையாளர்கள் பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மற்றும் தூய்மை பணியாளர்கள் சாக்கடை கால்வாயின் அடைப்பை சரிசெய்து மழைநீர் செல்ல வழிவகை செய்தனர். மேலும் மழைக்காலங்களில் இதுபோன்ற ஏற்படாத வகையில் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story