அரசு பஸ்களில் வழிந்தோடும் மழைநீர்


அரசு பஸ்களில் வழிந்தோடும் மழைநீர்
x
தினத்தந்தி 20 Aug 2023 2:45 AM IST (Updated: 20 Aug 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் இருந்து சென்னை, கன்னியாகுமரி இயக்கப்படும் அரசு பஸ்களில் மழைநீர் வழிந்தோடி வருகிறது. இதனால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் இருந்து சென்னை, கன்னியாகுமரி இயக்கப்படும் அரசு பஸ்களில் மழைநீர் வழிந்தோடி வருகிறது. இதனால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

பழுதடைந்த பஸ்கள்

நீலகிரி மாவட்டத்தின் கடைசி எல்லையில் கூடலூர், பந்தலூர் தாலுகாக்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் பயன்படுத்தும் வகையில் கூடலூரில் இருந்து கன்னியாகுமரி, சென்னை, செங்கோட்டைக்கு அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகிறது. இது தவிர கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதற்கிடையில் கன்னியாகுமரி, சென்னைக்கு இயக்கப்படும் விரைவு பஸ்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. அவை பயணிகளுடன் செல்லும்போது நடுவழியில் பழுதடைந்து நின்று விடுகிறது.

வழிந்ேதாடும் மழைநீர்

இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு கூடலூரில் பரவலாக மழை பெய்தது. அப்போது கூடலூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்ற அரசு விரைவு பஸ்சுக்குள் மழைநீர் வழிந்தோடியது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, கூடலூரில் இருந்து சென்னைக்கு பஸ்சில் செல்ல ரூ.650 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்வது இல்லை. மேற்கூரை பழுதால், பஸ்சில் மழைநீர் வழிந்தோடுகிறது. இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்ய முடியவில்லை. எனவே பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றனர்.


Next Story