வடிகால் இல்லாததால் வீடுகளை சூழ்ந்த மழைநீர்


வடிகால் இல்லாததால் வீடுகளை சூழ்ந்த மழைநீர்
x

வடிகால் இல்லாததால் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.

அரியலூர்

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தில் இருந்து பொன்பரப்பி வரையிலான 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.2 கோடியே 70 லட்சம் செலவில் புதிதாக சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக உஞ்சினி கிராமத்தின் கிழக்கு தெருவில் சுமார் 300 மீட்டர் தொலைவில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த சாலையைவிட கூடுதல் உயரத்தில் இந்த சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சாலையின் 2 பக்கமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த வாய்க்கால்களிலும் மண்ணை கொட்டி மூடிவிட்டனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழை பெய்து வருகிறது.

இதனால் மழைநீர் வெளியேற வழியின்றி அப்பகுதியில் உள்ள வீடுகளை சூழ்ந்து குளம் போல் காட்சி அளிப்பதோடு, வீடுகளிலும் புகுந்து விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மழைநீரை வெளியேற்ற முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அரியலூர் மாவட்ட கலெக்டர், இந்த சாலை பணியை ஆய்வு செய்து மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story