பள்ளிக்கூடத்தை மழை நீர் சூழ்ந்தது


பள்ளிக்கூடத்தை மழை நீர் சூழ்ந்தது
x

பள்ளிக்கூடத்தை மழை நீர் சூழ்ந்தது

தஞ்சாவூர்

திருவையாறு

திருவையாறு பகுதிகளில் தொடர் மழையால் பள்ளிக்கூடத்தை மழை நீர் சூழ்ந்தது. மேலும் 100 ஏக்கர் வாழை மரங்களும் சேதமடைந்துள்ளன.

பள்ளிக்கூடத்தை மழைநீர் சூழ்ந்தது

திருவையாறு பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவையாறை அடுத்த வைத்தியநாதன்பேட்டை ஊராட்சி ஆச்சனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை மழை நீர் சூழ்ந்து குளம் போல் காட்சி அளிக்கிறது. பள்ளிக்கூடத்தை சுற்றி எங்கு பார்த்தாலும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காணப்படுகிறது.

இந்த மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

100 ஏக்கர் வாழைமரங்கள் சேதம்

திருவையாறை அடுத்த மருவூர், வடுகவக்குடி, ஆச்சனூர், வைத்தியநாதன்பேட்டை பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக 100 ஏக்கர் வாழைமரங்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

எனவே நெற்பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்து இழப்பீடு வழங்குவதுபோல் வாழைகளுக்கும் இன்சூரன்ஸ் செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story