பேரணாம்பட்டு பகுதியில் பலத்த சூறை காற்றுடன் மழை
பேரணாம்பட்டு பகுதியில் பலத்த சூறை காற்றுடன் மழை பெய்தது.
ராணிப்பேட்டை
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு பகுதியில் பலத்த சூறை காற்றுடன் மழை பெய்தது.
பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று மாலை 5 மணியளவில் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. காற்றுக்கு தாக்னுகுப்பிடிக்க முடியாமல் கார்க்கூர் கிராமத்தில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான வாழைத்தோப்பில் அறுவடைக்கு தயராக இருந்த 50 வாழை மரங்கள் குலையுடன் காற்றில் சாய்ந்து சேதமடைந்தன.
இதேபோல் ரங்கம்பேட்டை கிராமத்தில் ஜங்கமூரை சேர்ந்த மோகனுக்கு சொந்தமான தோட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் காற்றில் சாய்ந்து சேதமடைந்தன. இவற்றின் மதிப்பு ரூ 1 லட்சம் என கூறப்படுகிறது. இவற்றை கிராம நிர்வாக அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story