பரமக்குடி அருகே பலத்த காற்றுடன் மழை
பரமக்குடி அருகே பலத்த காற்றுடன் மழை
ராமநாதபுரம்
பரமக்குடி
பரமக்குடி ஒன்றியம் பிடாரி சேரி குரூப் நெல்மடூர் ஊராட்சி, பார்த்திபனூர், பீயனேந்தல் ஆகிய பகுதிகளில் திடீரென நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த காற்று மழையால் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மேலும் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாயந்தன. மின் கம்பங்களும் கீழே விழுந்தன. இதனால் அப்பகுதியில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. கிராம மக்கள் அவதிப்பட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் நெல்மடூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ்குமார், வருவாய்த்துறையினர் மற்றும் மின்துறையினர் அந்த பகுதிக்கு சென்று நேற்று காலை முதல் பணிகளை மேற்கொண்டு சீர் செய்தனர். பின்பு பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், தாசில்தார் ரவி ஆகியோர் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
Related Tags :
Next Story