அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூரில் இடி-மின்னலுடன் மழை


அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூரில் இடி-மின்னலுடன் மழை
x
தினத்தந்தி 14 Oct 2022 11:48 PM IST (Updated: 15 Oct 2022 12:41 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூரில் இடி-மின்னலுடன் மழை

விருதுநகர்

அருப்புக்கோட்டை

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை மேகம் தினமும் மாலை நேரங்களில் காணப்பட்டாலும் சாரல் மழையே பெய்தது. அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் மாலை வேளையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து புளியம்பட்டி, வேலாயுதபுரம், பாளையம்பட்டி, கோபாலபுரம், மதுரை ரோடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. கனமழை காரணமாக. மோட்டார் சைக்கிளில் செல்வோர், பொதுமக்கள் அவதியடைந்தனர். பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீரோடு, கழிவுநீர் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியிலும் நேற்று பலத்த மழை பெய்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கே மலைப்பகுதியிலும் கனமழை பெய்தது. மலைப்பகுதிகளில் மதியத்திற்கு பிறகு மழை பெய்து வந்த நிலையில் நகர் பகுதியில் மாலையில் இருந்தே மிதமான மழை பெய்தது. விருதுநகரில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மிதமான மழையும், பல மணி நேரத்திற்கு சாரல் மழையும் பெய்தது. ராஜபாளையம், வத்திராயிருப்பு, சாத்தூர், சிவகாசி பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தபடி இருந்தது.


Related Tags :
Next Story