அரசு பள்ளியில் வானவில் மன்ற தொடக்க விழா
அரசு பள்ளியில் வானவில் மன்ற தொடக்க விழா நடந்தது.
தென்காசி 13-வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று வானவில் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலோசியஸ் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சீவலமுத்து முன்னிலை வகித்தார். தென்காசி வட்டார கல்வி அலுவலர் சண்முகசுந்தர பாண்டியன் வரவேற்று பேசினார். நகரமன்ற தலைவர் சாதிர் குத்து விளக்கேற்றி வானவில் மன்றத்தை தொடங்கி வைத்தார். விழாவில் தென்காசி வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகராஜ், மேற்பார்வையாளர் (பொறுப்பு) சரஸ்வதி, ஆசிரியை கவுசல்யா, நகர்மன்ற உறுப்பினர்கள் நாகூர் மீரான், ராசப்பா ஆகியோர் பேசினார்கள். பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகம் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் வின்சென்ட், மணி மந்திரி, ஹெப்சிபா விமலா, யாஸ்மின், தமிழ்ச்செல்வி, மாலையம்மாள் ஈஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.