மாணவர்களுக்கான வானவில் மன்றம் சார்ந்த போட்டிகள்


மாணவர்களுக்கான வானவில் மன்றம் சார்ந்த போட்டிகள்
x

மாணவர்களுக்கான வானவில் மன்றம் சார்ந்த போட்டிகள் நடைபெற்றன.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளி கொணரும் வகையில் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கல்வி இணை செயல்பாடுகளில் ஒன்றான வானவில் மன்றம் சார்ந்த மார்ச் மாத போட்டிகள் அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் சார்பாக வட்டார அளவில் தலைமை ஆசிரியர் ராஜகுமார் தலைமையில் நடைபெற்றது. வானவில் மன்றம் கண்காட்சி போட்டியினை வட்டார கல்வி அலுவலர்கள் மதலைராஜ், ராசாத்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன், ஆசிரிய பயிற்றுனர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். முன்னதாக ஆசிரியர் பயிற்றுனர் ஐயப்பன் அனைவரையும் வரவேற்றார். போட்டிகளின் நடுவர்களாக ஆசிரியர்கள் செயல்பட்டனர். வானவில் மன்றம் சார்ந்த அறிவியல் கண்காட்சி போட்டியில் மார்ச் மாதத்திற்கான அன்றாட வாழ்வில் ஒளியியல் என்ற தலைப்பில் அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை சார்ந்த 11 பள்ளிகளில் இருந்து 30 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். கல்லாத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவி தர்ஷிணி, த.குடிகாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஜெயலட்சுமி, புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் பிரதாப், ஜெயங்கொண்டம் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளி மாணவி அமுதா, சுண்டிப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் அஸ்விந்த், மேலகுடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் பிரபாகரன் ஆகியோர் வட்டார அளவில் வெற்றி பெற்று அரியலூரில் நடைபெற இருக்கும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் டேவிட் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார்.


Next Story