ராசிபுரத்தில் அதிகபட்சமாக36 மி.மீட்டர் மழைபதிவு
ராசிபுரத்தில் அதிகபட்சமாக 36 மி.மீட்டர் மழைபதிவானது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. ராசிபுரம், ஆண்டகளூர்கேட் குருக்கபுரம், புதுப்பாளையம், பட்டணம், காக்காவேரி, நாமகிரிப்பேட்டை, மங்களபுரம், வடுகம், குருசாமிபாளையம் உள்பட பல கிராமங்களில் நேற்று மாலையில் மழை பெய்தது. இதனால் வயல்கள், பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இரண்டு சக்கர வாகனங்களை ஓட்டிகள் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். கடந்த 2 நாட்களாக மாலை நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இரவு நேரத்தில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே சமயத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்தது. நேற்றுமுன்தினம் அதிகபட்சமாக ராசிபுரம் பகுதியில் 36 மி.மீட்டர் மழை பெய்தது.
நேற்று காலை 6 மணி நிலவரபடி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு:-
ராசிபுரம்-36, புதுச்சத்திரம்-23, மங்களபுரம்-22, கொல்லிமலை-16, கலெக்டர் அலுவலகம்-15, சேந்தமங்கலம்-14, நாமக்கல்-14, எருமப்பட்டி-3, திருச்செங்கோடு-2, குமாரபாளையம்-2, பரமத்திவேலூர்-1. மாவட்டத்தின் மொத்த மழைஅளவு 148 மி.மீட்டர் ஆகும்.