குமாரபாளையத்தில் அதிகபட்சமாக 85 மி.மீட்டர் மழைபதிவு


குமாரபாளையத்தில் அதிகபட்சமாக 85 மி.மீட்டர் மழைபதிவு
x

குமாரபாளையத்தில் அதிகபட்சமாக 85 மி.மீட்டர் மழைபதிவானது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக குமாரபாளையம் பகுதியில் 85 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு:- குமாரபாளையம்-85, திருச்செங்கோடு-40, கலெக்டர் அலுவலகம்-32, நாமக்கல்-17, சேந்தமங்கலம்-14, கொல்லிமலை-7, எருமப்பட்டி-3, புதுச்சத்திரம்-3, மாவட்டத்தின் மொத்த மழை அளவு 201 மி.மீட்டர் ஆகும். இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story