ராசிபுரத்தில் அதிகபட்சமாக 48 மி.மீட்டர் மழை பதிவு
ராசிபுரத்தில் அதிகபட்சமாக 48 மி.மீட்டர் மழை பதிவானது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் பொதுமக்களை சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக ராசிபுரம் பகுதியில் 48 மி.மீட்டர் மழைபதிவானது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு:-
எருமப்பட்டி-45, கலெக்டர் அலுவலகம்-43, கொல்லிமலை -41, சேந்தமங்கலம்-35, நாமக்கல்-20, திருச்செங்கோடு-15, குமாரபாளையம்-10, பரமத்திவேலூர்-4, புதுச்சத்திரம்-3. மாவட்டத்தின் மொத்த மழைஅளவு 264 மி.மீட்டர் ஆகும்.
Related Tags :
Next Story