இம்மாதத்தில் 40 சதவீதம் மழை குறைவு இருக்கலாம்


இம்மாதத்தில் 40 சதவீதம் மழை குறைவு இருக்கலாம்
x

18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த (ஆகஸ்டு) மாதத்தில் 40 சதவீதம் மழை குறைவு ஏற்படலாம் என வானிலை அறிவியலாளர் தெரிவித்தார்.

விருதுநகர்


18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த (ஆகஸ்டு) மாதத்தில் 40 சதவீதம் மழை குறைவு ஏற்படலாம் என வானிலை அறிவியலாளர் தெரிவித்தார்.

பருவமழை

தென்மேற்கு பருவமழை சீசனில் ஜூன் முதல் ஆகஸ்டு வரை மழை அதிகமாக பெய்யும். ஆதலால் வறட்சி ஏற்பட வாய்ப்பு இருக்காது.

கடந்த 1913-ம் ஆண்டுதான் இந்தியாவில் முதன்முதலாக மழை அளவை பதிவு செய்யும் நடைமுறை ஏற்பட்டது. 1913-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தேசிய அளவில் 188.8 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது. சராசரியாக நாடு முழுவதும் 250 மி.மீ. முதல் 255 மி.மீ. வரை மழை ஆகஸ்டு மாதத்தில் பெய்திருக்க வேண்டும். ஆனால், பல ஆண்டுகளில் ஆகஸ்டு மாதத்தில் மழை அளவு ஏற்ற, இறக்கமாகவே இருந்திருக்கிறது.

மழை அளவு

குறிப்பாக 2005-ம் ஆண்டு 190.1 மி.மீ., 2009-ம் ஆண்டு 192.5 மி.மீ., 2021-ம் ஆண்டு 196.2 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது. மற்ற ஆண்டுகளில் ஓரளவு பெய்திருக்கிறது.

ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி வரை 106.2 மி.மீ. மட்டுமே நாடு முழுவதும் பதிவாகி இருக்கிறது. இந்த மாதம் முடிய இன்னும் சுமார் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. அந்த நாட்களில் கன மழை கொட்டினாலும் இம்மாத சராசரி அளவான 250 மி.மீ. எட்டுவது மிகவும் கடினம் என்றே தெரிகிறது.

ஆகஸ்டு மாதத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. எனவே, நாடு முழுவதும் கணக்கில் எடுத்துக்கொண்டால் ஆகஸ்டு மாதத்தில் 40 சதவீதம் அளவுக்கு இந்த ஆண்டு மழை குறைவாக இருக்கவே வாய்ப்பு உள்ளது. கடந்த 18 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்ற ஒரு நிலை இந்த ஆண்டு ஏற்பட்டு இருக்கிறது.

இது குடிதண்ணீர் வினியோகம் மற்றும் விவசாய தேவைக்கான தண்ணீரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

மேற்கண்ட தகவலை வானிலை அறிவியலாளர் கூறினார்.


Related Tags :
Next Story